திரு இந்தளூர் பரிமள ரெங்கநாதர்
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் பஞ்சரங்க தலங்களில் ஒன்றானதுமான திருஇந்ததளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் மயிலாடுதுறை பேரூந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் இத்திருக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டடு பல்வேறு அரசர்களால் அவ்வவ்போது புதுப்பிகபட்டுவந்துள்ளது விமானம் வேதசக்ரவிமானம். தீர்த்தம். இந்து புஷ்ஹரிணி .பெருமாளின் திருநாமம் சுகுந்த வனநாதர் என்னும் பரிமள ரெங்கநாதர் .தாயார் சுகுந்தவனநாயகி என்னும் பரிமளரெங்கநாயகி .திருமங்கையாழ்வார் இத்திருதல பெருமாளை பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் .
தலவரலாறு :
உலகில் படைப்பு தொழிலை மேற்கொள்வதற்காக திருமாலால் பிர்மதேவனுக்கு வழங்கப்பட்ட வேதங்களை அசுரர்கள் அபகரித்து சென்று கடலலுக்கடியில் மறைத்து வைத்தனர் .பிர்மதேவன் திருமாலிடம் சென்று முறையிட்டார் . திருமால் அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார் .கடலுக்கடியில் மறைத்து வைகபட்டிருந்ததால் தாங்கள் முழுமையாக இல்லை எனவும் தங்களை சீர்செய்யும்படிவேதங்கள் திருமாலிடம் வேண்டின .திருமாலும் வேதங்களை சீர்செய்து
நறுமணம் வீசசெய்து பிர்மதேவனிடம் கொடுத்தார் . ஆதலால் இத்தலத்திற்கு சுகந்தவனம் என்னும் பெயர் ஏற்பட்டது .
காவிரி நதிநதிக்கு அருள் பாலித்தது :
புண்ணிய நதிகளில் தனக்கு முதலிடம் வேண்டுமென காவிரிநதி திருமாலிடம் வேண்ட , அவரும் காவிரிக்கு அருள்புரிந்து தான் காவிரி கரையில் ஐந்து இடங்களில் எழுந்தருளுவதாகவும் கூறினார் .தான் கடைசியாக எழுந்தருளும் சுகுந்தவன தலத்தில் துலாமாதத்தில் மற்ற புண்ணிய நதிகள் உன்னிடம் நீராடி தங்களுது பாவங்களை போக்கிகொள்ளும் என்றார் .அதன் நினைவாக இன்றளவும் துலா மாதத்தில் பெருமாள் தினசரி காவிரி கரைக்கு சென்று அருள் புரிவது மிகச் சிறப்பாகும் .தொண்டரடிபொடியாழ்வார் தனது திருமாலையில் கங்கையைவிட காவிரியே புணிதமாணவள் என போற்றுகிறார் .
நவகோள்களில் ஒன்றான சந்திரன் இத்தல பெருமாளை வணங்கி சாபவிமோசனம் பெற்றார் என்பது சிறப்பு .இத்தலத்தில் பெருமாள் நான்கு கரங்குளுடன் சயனித்த கோலத்தில் உள்ளார். கருவறையில் பெருமாளின் தென்புறம் காவிரி நதியும் வடபுறம் கங்கையும் பாதத்தின் அருகில் சந்திரனும் எழுந்தருளிக்கின்றனர். காவிரிக்கு முதலிடத்தை வழங்கியவரும் ,வேதங்களை நறுமணம் வீசசெய்தவருமான பெருமாளை நாமும் தரிசித்து அருள் பெறலாமே

No comments:
Post a Comment